முகப்புAZN / RUB • நாணயம்
add
AZN / RUB
முந்தைய குளோசிங்
45.57
சந்தைச் செய்திகள்
அசர்பைஜானி மனத் குறித்த விவரங்கள்
மனாட் அசர்பைஜான் நாட்டின் நாணயம். மனாட் என்ற சொல்லுக்கு அசேரி மொழியில் ”நாணயம்” என்று பொருள். அசர்பைஜான் நாட்டில் மனாட் என்ற பெயரில் மூன்று நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் 1919ல் மனாட் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1923 வரை இது புழக்கத்திலிருந்தது. அதன் பின்னர் அசர்பைஜான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே அசர்பைஜானிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், அசர்பைஜான் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் மனாட் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2006ல் மனாட் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மனாட் என்றழைக்கப்படுகின்றன. ஒரு மனாட்டில் 100 கேப்பிக்குகள் உள்ளன. மனாட்டைக் குறிக்க என்ற சின்னம் பயன்படுத்தபடுகிறது. Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia