முகப்புCAD / MVR • நாணயம்
add
CAD / MVR
முந்தைய குளோசிங்
11.30
சந்தைச் செய்திகள்
கனடியன் டாலர் குறித்த விவரங்கள்
கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. Wikipediaமாலத்தீவு ருஃபியா குறித்த விவரங்கள்
ருஃபியா மாலத்தீவுகளின் அலுவல்முறை நாணயமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான மாற்று வீதத்தையும் நாணயங்களை வெளியிடுவதையும் மாலத்தீவுகள் நிதிய ஆணையம் மேற்கொள்கின்றது. ருபியாவைக் குறிக்க பெரும்பாலும் MRF அல்லது Rf பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான ஐ.எசு.ஓ 4217 குறியீடு MVR ஆகும். ருபியா 100 லாரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "ருஃபியா" என்ற சொல் இந்திச் சொல் ருப்யா விலிருந்து வந்துள்ளது. 10 ஏப்ரல் 2011 நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கான மத்திய மாற்று வீதம் 12.85 ருபியாக்களாகும். இதிலிருந்து ±20% வரை வேறுபடலாம்; அதாவது 10.28 ருபியாக்களிலிருந்து 15.42 ருபியாக்கள் வரை. Wikipedia