முகப்புCNY / RUB • நாணயம்
add
CNY / RUB
முந்தைய குளோசிங்
11.36
சந்தைச் செய்திகள்
சீன யுவான் குறித்த விவரங்கள்
ரென்மின்பி அல்லது ஆர்.எம்.பி., என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன
ஃபென்களுக்குச் சமம். ரென்மின்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia