முகப்புCZK / RUB • நாணயம்
add
CZK / RUB
முந்தைய குளோசிங்
3.76
சந்தைச் செய்திகள்
செக் குடியரசு கொருனா குறித்த விவரங்கள்
செக் கொருனா செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக்கஸ்லோவாக்கிய கொருனா என்று பெயர். 1993ல் இரு நாடுகளும் பிரிந்தபோது நாணய முறைகளும் பிரிந்து செக் கொருனா, ஸ்லோவாக்கிய கொருனா என்று இருவேறு நாணயமுறைகளாகி விட்டன. செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைந்து விட்டாலும் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ நாணய முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. கொருனாவே செக் குடியரசின் நாணயமாகத் தொடர்கிறது. ஒரு செக் கொருனாவில் 100 ஹலேர்கள் உள்ளன. Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia