முகப்புIDR / AMD • நாணயம்
add
IDR / AMD
முந்தைய குளோசிங்
0.022
சந்தைச் செய்திகள்
இந்தோனேஷியன் ருபியா குறித்த விவரங்கள்
இந்தோனேசிய ரூபாய் அல்லது ரூபியா இந்தோனேசியாவின் அலுவல்முறை நாணயம் ஆகும். இந்தோனேசிய வங்கியால் வெளியிடப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும் இதன் ஐ.எசு.ஓ 4217 நாணயக் குறியீடு IDR ஆகும். "ரூபியா" என்ற பெயர் இந்துத்தானியச் சொல்லான ரூப்யா, மற்றும் சமசுகிருத வேரிலிருந்து வந்துள்ளது. பேச்சு வழக்கில் இந்தோனேசியர்கள் வெள்ளி என்பதற்கான இந்தோனேசியச் சொல்லான "பெராக்" என்பதையும் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ரூபியாவும் 100 சென்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; பணவீக்கத்தால் சென் நாணயங்களும் வங்கித்தாள்களும் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன.
ரியாயு தீவுகளும் நியூ கினியின் இந்தோனேசியப் பகுதியும் முன்பு தங்களுக்கேயான ரூபியாவைப் பயன்படுத்தி வந்தன; ஆனால் முறையே 1964, 1971ஆம் ஆண்டுகளில் இருந்து இங்கும் தேசிய ரூபியாவே செயலாக்கப்பட்டது. Wikipediaஆர்மேனியன் ட்ராம் குறித்த விவரங்கள்
டிராம் ஆர்மேனிய நாட்டின் நாணயம். நகோர்னோ கரபாக் குடியரசிலும் நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்மேனியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஆர்மேனியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1993ல் டிராம் என்ற புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு ஆர்மேனிய மொழியில் “பணம்” என்று பொருள். ஒரு டிராமில் 100 லூமாக்கள் உள்ளன. 1995ல் டிராமிற்கு դր.̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. Wikipedia