முகப்புIDR / MVR • நாணயம்
add
IDR / MVR
முந்தைய குளோசிங்
0.00091
சந்தைச் செய்திகள்
இந்தோனேஷியன் ருபியா குறித்த விவரங்கள்
இந்தோனேசிய ரூபாய் அல்லது ரூபியா இந்தோனேசியாவின் அலுவல்முறை நாணயம் ஆகும். இந்தோனேசிய வங்கியால் வெளியிடப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும் இதன் ஐ.எசு.ஓ 4217 நாணயக் குறியீடு IDR ஆகும். "ரூபியா" என்ற பெயர் இந்துத்தானியச் சொல்லான ரூப்யா, மற்றும் சமசுகிருத வேரிலிருந்து வந்துள்ளது. பேச்சு வழக்கில் இந்தோனேசியர்கள் வெள்ளி என்பதற்கான இந்தோனேசியச் சொல்லான "பெராக்" என்பதையும் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ரூபியாவும் 100 சென்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; பணவீக்கத்தால் சென் நாணயங்களும் வங்கித்தாள்களும் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன.
ரியாயு தீவுகளும் நியூ கினியின் இந்தோனேசியப் பகுதியும் முன்பு தங்களுக்கேயான ரூபியாவைப் பயன்படுத்தி வந்தன; ஆனால் முறையே 1964, 1971ஆம் ஆண்டுகளில் இருந்து இங்கும் தேசிய ரூபியாவே செயலாக்கப்பட்டது. Wikipediaமாலத்தீவு ருஃபியா குறித்த விவரங்கள்
ருஃபியா மாலத்தீவுகளின் அலுவல்முறை நாணயமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான மாற்று வீதத்தையும் நாணயங்களை வெளியிடுவதையும் மாலத்தீவுகள் நிதிய ஆணையம் மேற்கொள்கின்றது. ருபியாவைக் குறிக்க பெரும்பாலும் MRF அல்லது Rf பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான ஐ.எசு.ஓ 4217 குறியீடு MVR ஆகும். ருபியா 100 லாரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "ருஃபியா" என்ற சொல் இந்திச் சொல் ருப்யா விலிருந்து வந்துள்ளது. 10 ஏப்ரல் 2011 நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கான மத்திய மாற்று வீதம் 12.85 ருபியாக்களாகும். இதிலிருந்து ±20% வரை வேறுபடலாம்; அதாவது 10.28 ருபியாக்களிலிருந்து 15.42 ருபியாக்கள் வரை. Wikipedia