முகப்புIDR / PHP • நாணயம்
add
IDR / PHP
முந்தைய குளோசிங்
0.0035
சந்தைச் செய்திகள்
இந்தோனேஷியன் ருபியா குறித்த விவரங்கள்
இந்தோனேசிய ரூபாய் அல்லது ரூபியா இந்தோனேசியாவின் அலுவல்முறை நாணயம் ஆகும். இந்தோனேசிய வங்கியால் வெளியிடப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும் இதன் ஐ.எசு.ஓ 4217 நாணயக் குறியீடு IDR ஆகும். "ரூபியா" என்ற பெயர் இந்துத்தானியச் சொல்லான ரூப்யா, மற்றும் சமசுகிருத வேரிலிருந்து வந்துள்ளது. பேச்சு வழக்கில் இந்தோனேசியர்கள் வெள்ளி என்பதற்கான இந்தோனேசியச் சொல்லான "பெராக்" என்பதையும் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ரூபியாவும் 100 சென்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; பணவீக்கத்தால் சென் நாணயங்களும் வங்கித்தாள்களும் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன.
ரியாயு தீவுகளும் நியூ கினியின் இந்தோனேசியப் பகுதியும் முன்பு தங்களுக்கேயான ரூபியாவைப் பயன்படுத்தி வந்தன; ஆனால் முறையே 1964, 1971ஆம் ஆண்டுகளில் இருந்து இங்கும் தேசிய ரூபியாவே செயலாக்கப்பட்டது. Wikipediaபிலிப்பைன் பெசோ குறித்த விவரங்கள்
பிலிப்பைன் பெசோ, பிலிப்பீனிய பெசோ அல்லது பெசோ என்பது பிலிப்பைன்சு நாட்டின் உத்தியோகப்பூர்வ நாணயமாகும். "₱" எனும் குறியீட்டால் பெசோ குறிக்கப்படுகின்றது. இதைவிடவும் "PHP", "PhP", "Php", அல்ல்லது "P" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. கணினியில் யுனிகோட் மூலம் தட்டச்சு செய்யும் போது "20b1" என்றவாறு தட்டச்சு செய்வதன் மூலமாக "₱" இக்குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இப் பெசோ நாணயமானது மெக்சிகோ நாட்டிலும் எசுப்பானியாவின் முன்னைய காலனித்துவ நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. பிலிப்பைன் பெசோ வங்கி நோட்டுகளும் நாணயக்குற்றிகளும் பங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ் என அழைக்கப்படும் குவேசேனோ நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் மத்திய வங்கியில் அச்சடிக்கப்படுகின்றன. Wikipedia