முகப்புKZT / RUB • நாணயம்
add
KZT / RUB
முந்தைய குளோசிங்
0.16
சந்தைச் செய்திகள்
கஸகஸ்தானி டென்கே குறித்த விவரங்கள்
டெங்கே கசக்ஸ்தான் நாட்டின் நாணயம். கசக்ஸ்தான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் டெங்கே என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு கசாக் மொழியில் “தராசு” என்று பொருள். ஒரு லாரியில் 100 டியன்கள் உள்ளன. 2007ல் டெங்கேவிற்கு T̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. டெங்கே என்ற சொல்லிற்கு தனியே பன்மை வடிவம் கிடையாது.
1000 tenge commemorative banknote for 2010 year - the Chairmanship of Kazakhstan in OSCE Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia