முகப்புRON / RUB • நாணயம்
add
RON / RUB
முந்தைய குளோசிங்
17.88
சந்தைச் செய்திகள்
ரோமானியன் லியூ குறித்த விவரங்கள்
லியு ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும். இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்திலுள்ள லியு 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரொமேனியா ஜனவரி 1, 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டதால் 2014ம் ஆண்டு லியு நாணய முறை கைவிடப்பட்டு யூரோ ரொமேனியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூ என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். இதன் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பனிக்கள் உள்ளன. Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia