முகப்புRUB / BRL • நாணயம்
add
RUB / BRL
முந்தைய குளோசிங்
0.067
சந்தைச் செய்திகள்
ரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipediaபிரேசிலியன் ரியால் குறித்த விவரங்கள்
ரெயால் பிரேசிலின் புழக்கத்திலுள்ள நாணயம் ஆகும். இதன் குறியீடு R$ மற்றும் ஐ.எசு.ஓ குறியீடு BRL ஆகும். ஒரு ரெயால் 100 சென்டவோசாக பகுக்கப்பட்டுள்ளது.
இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. அமெரிக்க டாலருக்கு இணையான நாணயமாற்று வீதத்தில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது.
டாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு மூலம் குறிக்கப்படுகிறது. இருப்பினும் ஒருங்குறி இதனை எழுத்துரு வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை. Wikipedia