Google Maps இறுதிப் பயனர் கூடுதல் சேவை விதிமுறைகள்
கடைசியாக மாற்றியது: ஜூன் 4, 2025
Google Mapsஸையோ Google Maps Platform சேவைகளை ஒருங்கிணைக்கும் எந்தவொரு மூன்றாம் தரப்புத் தயாரிப்பு அல்லது சேவையையோ பயன்படுத்துவதன் மூலம், ஒரு இறுதிப் பயனராக நீங்கள் இவற்றை ஏற்க வேண்டும்: (1) Google சேவை விதிமுறைகள், (2) Google Mapsஸின் இந்தக் கூடுதல் சேவை விதிமுறைகள் (“Maps கூடுதல் விதிமுறைகள்”). Google Maps/Google Earth, Google Maps/Google Earth APIகள் ஆகியவற்றின் சட்டப்பூர்வ அறிவிப்புகளை Maps கூடுதல் விதிமுறைகள் குறிப்பால் உள்ளடக்குகிறது.
இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கவனமாகப் படிக்கவும். இந்த ஆவணங்கள் மொத்தமாக “விதிமுறைகள்” என்று அழைக்கப்படுகின்றன. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும், உங்களிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் இவை தெளிவுபடுத்துகின்றன.
உங்கள் Business Profileலை நிர்வகிக்க, Google Mapsஸில் வணிகர்களுக்கு மட்டுமேயான அம்சங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் https://support.google.com/business/answer/9292476 பக்கத்தில் உள்ள Google Business Profile விதிமுறைகள் உங்களுக்குப் பொருந்தும்.
எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கும்படி பரிந்துரைக்கிறோம். நாங்கள் என்னென்ன தகவல்களைச் சேகரிக்கிறோம், ஏன் சேகரிக்கிறோம் என்பதையும் உங்கள் தகவல்களை மாற்றுவது, நிர்வகிப்பது, பதிவிறக்குவது மற்றும் நீக்குவது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.
உரிமம். நீங்கள் இந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கும் வரை, இவற்றைச் செய்ய உதவும் அம்சங்கள் உட்பட Google Mapsஸைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை Google சேவை விதிமுறைகள் உங்களுக்கு வழங்குகிறது:
வரைபடங்களைப் பார்ப்பது, அவற்றில் விவரத்தைச் சேர்ப்பது;
KML ஃபைல்களையும் வரைபட அடுக்குகளையும் உருவாக்குவது; மற்றும்
ஆன்லைன், வீடியோ, பிரிண்ட் ஆகியவற்றில் முறையான உள்ளடக்க உதவியுடன் உள்ளடக்கத்தைப் பொதுவில் காட்டுவது.
Google Maps மூலம் செய்ய உங்களுக்கு அனுமதியுள்ள குறிப்பிட்ட விஷயங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு Google Maps, Google Earth மற்றும் Street View பயன்படுத்துவது தொடர்பான அனுமதிகள் பக்கத்தைப் பாருங்கள்.
தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள். இந்த 2ம் பிரிவில் உள்ளவற்றுக்கு நீங்கள் இணங்கி நடப்பது Google Maps பயன்படுத்தும் உரிமத்திற்கான ஒரு நிபந்தனையாகும். Google Maps பயன்படுத்தும்போது நீங்கள் இவற்றைச் செய்யக்கூடாது (அல்லது உங்கள் சார்பில் யாரையும் இவற்றைச் செய்ய அனுமதிக்கக்கூடாது):
Google Mapsஸின் பகுதிகளை மறுவிநியோகமோ விற்பனையோ செய்வது அல்லது Google Mapsஸின் அடிப்படையில் புதிய தயாரிப்பையோ சேவையையோ உருவாக்குவது;
உள்ளடக்கத்தை நகலெடுப்பது (Google Maps, Google Earth மற்றும் Street View பயன்படுத்துவது தொடர்பான அனுமதிகள் பக்கமோ "நியாயமான பயன்பாடு" உட்பட பொருந்தக்கூடிய அறிவுசார் உடைமைச் சட்டமோ வேறுவிதமாக உங்களை அனுமதித்தாலே தவிர);
உள்ளடக்கத்தின் பெரும்பகுதியைப் பதிவிறக்குவது/ஊட்டங்களை மொத்தமாக உருவாக்குவது (அல்லது அதைச் செய்ய பிறரை அனுமதிப்பது);
Google Mapsஸுக்கு மாற்றாகவோ அதைப்போன்ற சேவையாகவோ பயன்படுத்தும் வகையில், Google Mapsஸைப் பயன்படுத்தி வரைபடமாக்கல் தொடர்பான மற்ற தரவுத்தொகுப்பை (வரைபடமாக்கல் அல்லது வழிகாட்டுதல் தரவுத்தொகுப்பு, பிசினஸ் விவரங்கள் தரவுத்தளம், அஞ்சல் பட்டியல் அல்லது டெலிமார்க்கெட்டிங் பட்டியல் உட்பட) உருவாக்குவது அல்லது மேம்படுத்துவது; அல்லது
Google வழங்கும் Android Auto போன்ற குறிப்பிட்ட சில அம்சங்களைத் தவிர, நிகழ்நேர வழிகாட்டல் அல்லது வாகனத்தின் தானியங்கிக் கட்டுப்பாட்டு அம்சத்தை வழங்குகின்ற அல்லது அதனுடன் தொடர்புடைய பிறரின் தயாரிப்புகள் அல்லது சேவைகளுடன் Google Mapsஸின் பகுதிகளைப் பயன்படுத்துவது.
நிஜ உலகச் சூழ்நிலைகள்; ஆபத்தைப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல். Google Maps வரைபடத் தரவு, டிராஃபிக், வழிகள் மற்றும் பிற உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது, நிஜ உலகச் சூழல்களும் வரைபட முடிவுகள் மற்றும் உள்ளடக்கமும் வெவ்வேறாக இருப்பதைப் பார்க்கலாம். அதனால், இதைப் புரிந்துகொண்டு உங்கள் சொந்த முடிவின் அடிப்படையில் Google Mapsஸைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் நீங்களே எப்போதும் பொறுப்பு.
Google Mapsஸில் உங்கள் உள்ளடக்கம். Google Maps மூலம் நீங்கள் பதிவேற்றும், சமர்ப்பிக்கும், சேமிக்கும், அனுப்பும் அல்லது பெறும் உள்ளடக்கம், Googleளின் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது, இதில் “உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி” என்ற பிரிவில் உள்ள உரிமமும் அடங்கும். இருப்பினும், உங்கள் சாதனத்தில் மட்டுமே உள்ள உள்ளடக்கம் (சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள KML ஃபைல் போன்றவை) Googleளில் பதிவேற்றப்படாது அல்லது சமர்ப்பிக்கப்படாது என்பதால், அவற்றுக்கு இந்த உரிமம் பொருந்தாது.
அரசாங்கத்தின் இறுதிப் பயனர்கள். அரசு நிறுவனத்தின் பிரதிநிதியாக Google Maps பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்:
நிர்வகிக்கும் சட்டம்.
- அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நகரம் அல்லது மாநில அரசின் நிறுவனங்களுக்கு, நிர்வகிக்கும் சட்டம் மற்றும் வழக்கு விசாரணை நிகழுமிடம் தொடர்பான Google சேவை விதிமுறைகள் பிரிவு பொருந்தாது.
- அமெரிக்க ஃபெடரல் அரசு நிறுவனங்களுக்கு, நிர்வகிக்கும் சட்டம் மற்றும் வழக்கு விசாரணை நிகழுமிடம் தொடர்பான Google சேவை விதிமுறைகள் பிரிவுக்குப் பதிலாக இது பொருந்தும்: “சட்ட முரணைக் கருத்தில் கொள்ளாமல், அமெரிக்காவின் சட்டங்களின்படி இந்த விதிமுறைகள் நிர்வகிக்கப்படும், புரிந்துகொள்ளப்படும் மற்றும் அமலாக்கப்படும். முழுமையாக, ஃபெடரல் சட்டம் அனுமதிக்கும் எல்லை வரை: (A) பொருந்தக்கூடிய ஃபெடரல் சட்டம் இல்லாதபட்சத்தில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சட்டங்கள் (கலிஃபோர்னியா சட்ட முரண் விதிகள் தவிர) பொருந்தும்; மற்றும் (B) இந்த விதிமுறைகள் அல்லது Google Maps காரணமாகவோ தொடர்பாகவோ உருவாகும் எந்தவொரு வழக்கும் கலிஃபோர்னியாவின் சாண்ட்டா கிளாரா மாவட்ட ஃபெடரல் நீதிமன்றங்களில் பிரத்தியேகமாக வழக்காடப்படும், சம்பந்தப்பட்ட தரப்புகள் அந்த நீதிமன்றங்களின் தனிப்பட்ட அதிகார எல்லைக்குக் கட்டுப்படுவதாக ஒப்புக்கொள்கின்றன.”
அமெரிக்க அரசுக்கான கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள். அமெரிக்க ஃபெடரல் அரசு மூலம் அல்லது அரசுக்காக Google Mapsஸின் எல்லா அணுகலும் பயன்பாடும் Google Maps/Google Earth சட்டப்பூர்வ அறிவிப்புகளில் உள்ள "அமெரிக்க அரசுக்கான கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள்" பிரிவுக்கு உட்பட்டது.