மாற்றங்களின் சுருக்கம்
Google சேவை விதிமுறைகள் 11 நவம்பர், 2013 அன்று புதுப்பிக்கப்பட்டன.
சட்டரீதியான வார்த்தைகள் உங்களில் பலருக்கு தெரியாது என்பதால், உங்கள் வசதிக்காக எளிய ஆங்கிலச் சுருக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
நாங்கள் மூன்று மாற்றங்கள் செய்துள்ளோம்:
- முதலாவது, உங்கள் சுயவிவரப் பெயர் மற்றும் படம் ஆகியவை Google தயாரிப்புகளில் (மதிப்புரைகள், விளம்பரம் மற்றும் பிற வர்த்தக சூழல்கள் உள்பட) எப்படித் தோன்றும் என்பதை விளக்குதல்.
- நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகள் அமைப்பு வழியாக விளம்பரங்களில் தோன்றவேண்டியது உங்கள் படமா பெயரா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
- இரண்டாவது, உங்கள் மொபைல் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த, ஒரு நினைவூட்டல்.
- மூன்றாவது, உங்கள் கடவுச்சொல்லை ரகசியமாக வைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் சார்ந்த விவரங்கள்.
இங்கே மேலும் சில விவரங்கள்:
உங்கள் சுயவிவரப் பெயர் மற்றும் படம் எவ்வாறு தோன்றலாம் (மதிப்புரைகள் மற்றும் விளம்பரப்படுத்தல் உள்பட)
உங்களுக்கு – உங்கள் நண்பர்கள் மற்றும் இணைப்புகளுக்கு – மிகவும் பயனுள்ள தகவலை வழங்கயுள்ளோம். உங்களுக்குத் தெரிந்த நபர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகள் உண்மையிலேயே உதவியாக இருக்கலாம். இதன்மூலம் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மேலும் பிற நபர்கள், உங்கள் சுயவிவரப் பெயர் மற்றும் படம் மற்றும் நீங்கள் பகிரும் மதிப்புரைகள் அல்லது நீங்கள் +1 செய்த விளம்பரங்கள் போன்ற உள்ளடக்கத்தைக் காணலாம். நீங்கள் ஒரு செயலைச் செய்யும்போது (+1 செய்வது, கருத்துகளைத் தெரிவிப்பது அல்லது பின்தொடர்வது போன்ற விஷயங்கள்) மட்டுமே இது நிகழ்கிறது – மேலும் நீங்கள் அந்த உள்ளடக்கத்தைப் பகிர, தேர்ந்தெடுத்த நபர்கள் மட்டுமே இதைக் காண முடியும். Google இல், நீங்கள் பகிரும் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் . கடந்த காலத்தில் நீங்கள் விஷயங்களைப் பகிர்ந்தவர்கள் அல்லது எதிர்காலத்தில் நீங்கள் விஷயங்களைப் பகிர விரும்பும் கட்டுப்பாட்டு திறத்துடன் இருப்பவர்களுக்குச் சேவை விதிமுறைகளில் செய்யப்படும் இந்தப் புதுப்பிப்புகளால் பாதிக்கப்படாது.
உங்களுக்குத் தெரிந்த நபர்களிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டமானது உங்கள் நேரத்தைச் சேமிக்கலாம் மேலும் தேடல், வரைபடம், Play மற்றும் விளம்பரப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து Google சேவைகளிலும் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்குமான முடிவுகளைத் துல்லியப்படுத்தலாம். எடுத்துகாட்டாக, இசைக்கச்சேரியின் Google Play பக்கத்தில், நீங்கள் ஒரு ஆல்பத்திற்கு 4 நட்சத்திரங்களை மதிப்பிட்டுள்ளீர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் காண முடியும். மேலும் உங்களுக்குப் பிடித்த உள்ளூர் பேக்கரிக்கு நீங்கள் அளித்த +1 ஆனது Google மூலம் இயங்கும் பேக்கரி விளம்பரத்தில் சேர்க்கப்படும். இந்தப் பரிந்துரைகளை பகிரப்பட்ட ஏற்பிசைவுகள் என அழைக்கலாம், நீங்கள் அவற்றைப்பற்றி இங்கே மேலும் அறியலாம்.
விளம்பரங்களில் பகிரப்பட்ட ஏற்பிசைவுகள் இருந்தால், பகிரப்பட்ட ஏற்பிசைவுகளின் அமைப்பு மூலம் உங்கள் சுயவிவரப் பெயர் மற்றும் படம் ஆகியவற்றின் பயனைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் அமைப்பை "முடக்கு" என்பதற்கு மாற்றினால், உங்கள் சுயவிவரப் பெயர் மற்றும் படம் ஆகியவை உங்களுக்குப் பிடித்த பேக்கரி விளம்பரம் அல்லது எதேனும் பிற விளம்பரங்களில் காட்டப்படாது. இந்த அமைப்பு விளம்பரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், மற்றும் உங்கள் சுயவிவரப் பெயர் அல்லது படம் Google Play போன்ற பிற இடங்களில் பயன்படுத்தப்பட்டாலும் மாறாது.
உங்களுடைய +1 கள் விளம்பரங்களில் தோன்ற வேண்டாம் என Google இடம் நீங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தால், மேம்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் பகுதியாக அந்தத் தேர்வை நாங்கள் தொடர்ந்து மதிப்போம். 18 வயதுக்குட்பட்ட பயனர்களின் செயல்கள் விளம்பரங்களில் உள்ள பகிரப்பட்ட ஏற்பிசைவுகள் மற்றும் குறிப்பிட்ட பிற சூழல்களில் தோன்றாது.
Google இல் உள்ள விளம்பரங்களின் மூலம் உங்கள் அனுபவத்திற்கான சிறந்த கட்டுப்பாட்டிற்கு, நீங்கள் Google இன் விளம்பரங்கள் அமைப்புகளின் கருவி ஐப் பயன்படுத்தி நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை நிர்வகிக்கலாம். மேலும் அறிக.
உங்கள் மொபைல் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும்
இது பொதுவான விஷயம்: வாகனம் ஓட்டுதல் போன்று உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய தருணங்களில், எங்கள் சேவையைப் பயன்படுத்தவேண்டாம், பயன்படுத்துவதன்மூலம் எங்கள் சேவைகள் உங்களைத் திசைத்திருப்பலாம். அதோடு, வாகனம் ஓட்டும்போது சட்டத்தைப் பின்பற்றவும்.
உங்கள் கடவுச்சொல்லின் மேல் அதிக கவனம் செலுத்தவும்
உங்கள் தகவலைப் பாதுகாப்பாக மற்றும் பத்திரமாக வைப்பதே எங்களின் முதல் முன்னுரிமை. பயனுள்ள விஷயங்களை அணுக உங்கள் பயனர்பெயரும் கடவுச்சொல்லும் உதவுகிறது - உங்கள் Gmail செய்திகள், Google+ புகைப்படங்கள், YouTube வீடியோக்கள், Google தொடர்புகள் பட்டியல் மற்றும் பல. எவருக்கேனும் உங்கள் உள்நுழைவு விவரங்களைக் கொடுத்தால், உங்கள் Google கணக்கு மற்றும் Google இல் நீங்கள் சேமித்த விஷயங்களை அணுக அவர் அதைப் பயன்படுத்துவார். அதனால் உங்கள் கடவுச்சொல் கேட்கப்பட்டால், உங்கள் தகவலைப் பகிர்வதற்கு பத்திரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வழிகள் ஏதேனும் உள்ளனவா என்பதை இருமுறை சிந்திக்கவும்.
நாங்கள் வழக்கத்திற்கு மாறானவற்றைக் கண்டால் (உங்கள் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும்போது தோல்வியடைதல் ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் அமைந்த கணினிகளிலிருந்து சிறிய கால இடைவெளியிலேயே உங்கள் கணக்கில் மேற்கொள்ளப்படும் இரண்டு உள்நுழைவுகள் போன்றவை) நீங்கள் வழக்கமற்ற செயல்பாட்டின் விழிப்பூட்டல் பகுதியில் அதைக் காணலாம்.
2-படி சரிபார்ப்பை சேர்ப்பதோடு, உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான பிற வழிகளை அறிந்துகொள்ளவும்.
இதை இந்தப் பக்கத்தின் இறுதியாக உருவாக்கியதற்காக நன்றி – இந்த விஷயம் சலிப்பானதாக இருக்கலாம், ஆனால் இது எங்களுக்கு முக்கியமானதாகும். உங்களுக்கு விதிமுறைகள் எவ்வாறு பொருந்தும் எனப் பார்க்க, உங்கள் நாட்டிற்கான சேவை விதிமுறைகளைச் சரிபார்க்கவும்.