ஒவ்வொரு படமாகச் சேர்த்து உங்கள் வரைபடத்திற்கு உயிரூட்டுகிறது
Street View கோடிக்கணக்கான பனோரமா படங்களை ஒன்றிணைத்து நம்மைச் சுற்றியுள்ள இடங்களை Google Mapsஸில் விர்ச்சுவலாகக் காட்டுகிறது. Street View உள்ளடக்கம் Googleளிடம் இருந்தும் மற்ற பங்களிப்பாளர்களிடம் இருந்தும் பெறப்படுகின்றன. எங்கள் கூட்டு முயற்சிகளால், அனைவரும் உலகை விர்ச்சுவலாகக் கண்டு உலாவ வழிசெய்கிறோம்.
Watch the film
Link to Youtube Video (visible only when JS is disabled)
விஷுவலாக ஒரு பயணம்
நீங்கள் பயணிக்கும்போது எங்கே செல்லலாம், என்ன எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள 360 டிகிரி படங்கள் உதவுகின்றன. உங்கள் சாதனத்தில் இருந்து புகழ்பெற்ற இடங்கள், கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களைப் பார்க்கலாம் அல்லது Street Viewவின் கடந்தகாலப் படங்கள் மூலம் கடந்த காலத்தில் பயணித்து காலப்போக்கில் இடங்கள் எப்படி மாறியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
அடுத்த Street View படங்களை Google எங்கே சேகரிக்கிறது?
Street View கார் அல்லது Street View ட்ரெக்கரில் அடுத்து எங்கே செல்கிறோம் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
பிரபலமான Street View இடங்களைக் கண்டறியுங்கள்