Jump to Content

உங்கள் பிசினஸின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் காட்சிப்படுத்துங்கள்

படங்களும் விர்ச்சுவல் உலாக்களும் பிசினஸுக்கு வருகை தரத் தீர்மானிக்க மக்களுக்கு உதவும். உங்கள் ஆன்லைன் விவரத்தை மேம்படுத்தி, உங்கள் பிசினஸை அதன் சிறந்த அம்சங்களுடன் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் காட்சிப்படுத்துங்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் வருகை தரும் முன்னரே அவர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை Street View படங்களை உலாவும்போதே அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Show_your_business_.webp
  • 100+

    நாடுகளும் பிராந்தியங்களும் Street Viewவில் உள்ளன

  • 100 கோடி+

    மாதாந்திரப் பயனர்கள் Google Mapsஸில் உள்ளனர்

  • 20 கோடி+

    பிசினஸ்களும் இடங்களும் Google Mapsஸில் உள்ளன

business-hero-line-image
கடை முகப்பின் Google Street View 360 டிகிரி காட்சி

வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை உங்கள் கடை முகப்பின் 360 டிகிரி காட்சி மூலம் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

வருகையாளர்கள் உங்கள் பிசினஸிற்கு வருவதற்கு வழிகாட்டுவதற்கும், அவர்கள் எங்கே வாகனங்களை நிறுத்தலாம், உங்கள் நுழைவு வாயில் சக்கர நாற்காலிக்கு ஏற்றதா போன்ற முக்கியமான தகவல்களை அவர்களுக்குக் காட்டுவதற்கும் உங்கள் சொந்த வெளிப்புறப் படங்களை உருவாக்குங்கள்.
சான்சிபாரில் உள்ள வொண்டர்ஸ் பொட்டிக்கின் Google Street View 360 டிகிரி உட்புற உலா

விர்ச்சுவல் உலா மூலம் உங்கள் பிசினஸைத் தனிப்படுத்திக் காட்டுங்கள்

வாடிக்கையாளர்கள் வருகை தரும் முன்னரே உங்கள் பிசினஸைப் பற்றியும் அங்கு என்னென்ன கிடைக்கும் என்பதைப் பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் உங்கள் பிசினஸின் உட்புறப் படங்களையும் பிற தகவல்களையும் வழங்குங்கள். உங்கள் பிசினஸின் உட்புறம், தயாரிப்பு அடுக்குகள், மெனுக்கள் ஆகியவற்றைப் படமெடுத்து அவற்றை நீங்களாகவோ நிபுணரின் உதவியுடனோ Street Viewவில் பகிருங்கள்.
Getty Imagesஸின் Google Street View பிசினஸ் முகப்பு - Tinpixels

புதிய படங்கள் மூலம் வருகையாளர்களை உங்கள் பிசினஸிற்கு மீண்டும் வரும்படித் தூண்டுங்கள்

நீங்கள் இப்போதுதான் கடையின் வடிவமைப்பை மாற்றினீர்களா அல்லது புதிய தயாரிப்புகளை வழங்கத் தொடங்கினீர்களா? Street Viewவில் உங்கள் படங்களைப் பதிவேற்றுங்கள். மாற்றங்களையும் ஆர்வமூட்டும் தயாரிப்புகள் அல்லது சேவைகள் குறித்து உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து தெரிவிப்பதன் மூலம், ஆன்லைனில் உங்கள் நற்பெயரைத் தொடர்ந்து மேம்படுத்தலாம்.
business-card-line-image

எப்படித் தொடங்குவது?

  • கேமராவை வாங்குங்கள் அல்லது நிபுணரைப் பணியமர்த்துங்கள்

  • உங்கள் படங்களை உருவாக்குங்கள்

  • உங்கள் படங்களை வெளியிடுங்கள்