Google Chrome, ChromeOS ஆகியவற்றுக்கான கூடுதல் சேவை விதிமுறைகள்

கடைசியாக மாற்றியது: 30 செப்டம்பர், 2025

Chrome அல்லது ChromeOSஸைப் பயன்படுத்துவதன் மூலம், https://policies.google.com/terms என்ற தளத்திலுள்ள Google சேவை விதிமுறைகளையும் Google Chrome, ChromeOS ஆகியவை தொடர்பான கூடுதல் சேவை விதிமுறைகளையும் ஏற்கிறீர்கள்.

இந்த Google Chrome, ChromeOS ஆகியவற்றுக்கான கூடுதல் சேவை விதிமுறைகள், Chrome மற்றும் ChromeOSஸின் செயலாக்கக் குறியீட்டுப் பதிப்புக்குப் பொருந்தும். பெரும்பாலான Chrome மூலக் குறியீடுகள் chrome://credits என்ற தளத்தில் உள்ள ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிம ஒப்பந்தங்கள் என்பதன் கீழ் இலவசமாகக் கிடைக்கும்.

பின்வரும் விதிமுறைகளுக்கு உட்பட்டே Chrome, ChromeOS ஆகியவற்றின் சில கூறுகளை உங்களால் பயன்படுத்த முடியும்:

AVC

இந்தத் தயாரிப்பு பின்வருபவற்றைச் செய்வதற்காக நுகர்வோர் ஒருவரின் தனிப்பட்ட அல்லது ஊதியம் எதையும் பெறாத வேறு உபயோகங்களுக்காக AVC காப்புரிமைப் பிரிவு உரிமத்தின் கீழ் அளிக்கப்பட்ட உரிமத்தைக் கொண்டுள்ளது: (i) AVC தரத்திற்கு இணங்க வீடியோவை என்கோட் செய்வது ( "AVC வீடியோ") மற்றும்/அல்லது (ii) தனிப்பட்ட செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் நுகர்வோர் என்கோட் செய்த மற்றும்/அல்லது AVC வீடியோ வழங்க உரிமம் அளிக்கப்பட்ட வீடியோ வழங்குநரிடமிருந்து பெற்ற AVC வீடியோவை டீகோட் செய்வது. வேறு எந்தவொரு உபயோகத்திற்காகவும் எந்த உரிமமும் வழங்கப்படவோ மறைமுகமாகக் குறிக்கப்படவோ மாட்டாது. MPEG LA, L.L.C ஆகியவற்றிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெறலாம். HTTPS://WWW.VIA-LA.COM என்ற தளத்திற்குச் செல்க.