``இந்தியாவிலுள்ள 99 சதவிகித முஸ்லிம்கள் இந்துஸ்தானிகளாக இருக்கின்றனர்!"- ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி பேச்சு

ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், `இந்தியாவிலிருக்கும் 99 சதவிகித முஸ்லிம்கள் இந்துஸ்தானிகளாக இருக்கின்றனர்' என்று கூறியிருக்கிறார்.

Published:Updated:
இந்திரேஷ் குமார் - ஆர்.எஸ்.எஸ்
இந்திரேஷ் குமார் - ஆர்.எஸ்.எஸ் ( ட்விட்டர் )
0Comments
Share

கடந்த செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியை நேரில் சந்தித்திருந்தார். அதைத் தொடர்ந்து உமர் அகமது இல்யாஸி, மோகன் பகவத்தை 'ராஷ்டிர-பிதா' என்று கூறியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், `இந்தியாவிலிருக்கும் 99 சதவிகித முஸ்லிம்கள் இந்துஸ்தானிகளாக இருக்கின்றனர்' என்று கூறியிருக்கிறார். தானே மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முஸ்லிம் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்) செயல்பாட்டாளர்களின் இரண்டு நாள் மாநில அளவிலான பயிலரங்கின் நிறைவுவிழாவில் இந்திரேஷ் குமார் கலந்துகொண்டார்.

இந்திரேஷ் குமார் - ஆர்.எஸ்.எஸ்
இந்திரேஷ் குமார் - ஆர்.எஸ்.எஸ்
ட்விட்டர்

அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திரேஷ் குமார், ``புனித குர்ஆனின் கட்டளைகள் மற்றும் கொள்கைகளின்படி, தேசத்துக்கான நமது கடமையை மிக உயர்வானதாகவும், மற்ற எல்லாவற்றையும்விட மேலானதாகவும் கருத வேண்டும். மேலும், இந்தியாவிலிருக்கும் 99 சதவிகித முஸ்லிம்கள், தங்களின் முன்னோர்கள், கலாசாரம், பாரம்பர்யம் மற்றும் தாய்நாட்டின் அடிப்படையில் இந்துஸ்தானிகளாக இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.