ப்ளூ வேல் கணினி விளையாட்டு மதுரையில் ஒருவர் பலி !

மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரிக்கு அருகில் இருக்கும் மொட்ட மலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் அருகிலுள்ள கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ப்ளூ வேல் கணினி விளையாட்டு மதுரையில் ஒருவர் பலி !
இந்த நிலையில், விக்னேஷ் தனது வீட்டில் புதன் கிழமையன்று அதி காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவரது வலது கையில் கூர்மையான பொருளால் திமிங்கிலத்தின் படம் வரையப் பட்டிருந்ததாக காவல் துறை தெரிவிக்கிறது. 

மேலும் அவர் வைத்திருந்த நோட்டுப் புத்த கங்களிலும் திமிங்கலத்தின் படம் வரையப் பட்டிருக்கிறது.
இது குறித்து பிபிசி யிடம் பேசிய, மதுரை மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் மணிவண்ணன், அவர் ப்ளூ வேல் கணினி விளை யாட்டைத் தான் விளையாடி யிருக்கிறார். 

அவரது செல் பேசியில் அதற் கான 'ஆப்' (App) ஏது மில்லை. ஆனால், அவர் ஆன்லைனில் விளையாடி யிருக்கலாம். 

மேலும் ஒரு வழக்கத்திற்கு மாறான வாட்ஸப் குழுமத்திலும் அவர் இருந்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
விக்னேஷ் சில நாட்களுக்கு முன்பாகத் தான் ஆண்ட்ராய்ட் இயங்கு தளமுள்ள செல் பேசியை வாங்கியுள்ளார். 

அவரது நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாகவே விசித்திரமாக இருந்ததை குடும்பத்தினர் உறுதி செய்கின்றனர். 

அவர் தூக்கிலிட்டுக் கொள்ளும் போது அவரது செல்பேசி கேமரா இயக்கத்தில் இருந்தது என்கிறார் மணி வண்ணன்.

விசா ரணை துவக்க நிலை யில் இருந் தாலும் விக்னே ஷின் நண் பர்கள் சிலரும் இந்த ஆட்ட த்தில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக மணி வண்ணன் தெரிவித்திருக்கிறார்.

இந்த மரணம் குறித்து விசாரிக்க காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் படை ஒன்றை மாவட்ட காவல்துறை அமைத்துள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் காவல்துறை தற்போது ஏற்பாடுகளைச் செய்து வருவதாக காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார். 
மதுரை மாவ ட்டத்தில் யாராவது இந்த விளை யாட்டில் ஈடு படுவது குறித்துத் தெரிய வந்தால், காவல் துறைக்கு தகவல் அளிக்க தனி எண் ஒன்றும் அறிவி க்கப்பட் டுள்ளது.

ஏற்கனவே சென்னை நகரக்காவல் துறை இது தொட ர்பான அறிவு றுத்தல்களை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட தாகச் சொல்லப்படும் இந்த ப்ளூ வேல் கணினி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் 50 வேலைகளைச் செய்ய வேண்டும். 

அதி காலை 4.20க்கு எழுவது, பேய்ப் படங்களைத் தனியாகப் பார்ப்பது, சுயமாக காயங்களை ஏற்படுத் திக் கொள்வது, திமிங்கிலத்தின் பட த்தை கூர்மையான பொருளால் கையில் வரைந்து கொள்வது, 
ப்ளூ வேல் கணினி விளையாட்டு மதுரையில் ஒருவர் பலி !
உயரமான கட்டடத்தின் உச்சிக்கு ஏறுவது போன்ற பணிகள், விளையாட்டின் நிர்வாகிகளால் அளிக்கப்படும். முடிவில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். 
உலகம் முழுவதும் இந்த விளை யாட்டிற்கு 130 பேர் வரை பலியாகி யிருப்பதாக அஞ்சப்படுகிறது. 

சமூக வலை தளங்களில் இருந்தும் தேடு பொறிகளில் இருந்தும் இந்த விளையாட்டிற்கான இணைப்பை நீக்கும்படி இந்திய அரசு ஏற்கனவே இணையதள நிறுவனங்களுக்கு உத்தர விட்டிருக்கிறது
Tags:
Privacy and cookie settings