பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு செய்வது எப்படி? | Green Chilli - Coriander Thokku Recipe !





பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு செய்வது எப்படி? | Green Chilli - Coriander Thokku Recipe !

0
தேவையானவை:

மல்லித்தழை – 2 கட்டு,

பச்சை மிளகாய் – 15,

புளி, எலுமிச்சம்பழம் – சிறிய அளவு

உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்,

பூண்டு – 6 பல். தாளிக்க:

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் – கால் கப். வறுத்துப் பொடிக்க:

வெந்தயம் – 1 டீஸ்பூன்,

பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை:
பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு

மல்லியைச் சுத்தம் செய்து, அலசித் தண்ணீரை வடிய விடுங்கள். ஒரு துணியில் அதைப் பரப்பி, ஈரம் காயும் வரை உலர விடுங்கள். 

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து, அதில் கடுகு தாளித்து, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள்.

பின்னர் மல்லித் தழையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி, இறக்கி, ஆறியதும் எல்லா வற்றையும் நைஸாக அரையுங்கள். 

வறுத்துப் பொடித்த வெந்தயம் - பெருங்காயத் தூள் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)